தமிழக செய்திகள்

15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்; போக்சோ சட்டத்தில் எலக்ட்ரீசியன் கைது

15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் ஈடுபட்ட எலக்ட்ரீசியனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தினத்தந்தி

சென்னை தியாகராயநகர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 42). எலட்ரிசீயனான இவர், 15 வயது சிறுமியிடம் கடந்த ஒரு வருடமாக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்தார்.

சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படவே, அவரது பெற்றோர் இதுகுறித்து விசாரித்தனர். அப்போது கணேசனின் காம விளையாட்டில் சிறுமி சிக்கி இருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுகுறித்து தேனாம்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியிடம் காம விளையாட்டில் ஈடுபட்ட கணேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை