காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை டேவிட் நகரில் உள்ள தனியார் பள்ளியில் வஞ்சூவாஞ்சேரி பகுதியை சேர்ந்த தமிழரசு (வயது 28) உடற்கல்லி ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவர் அந்த பள்ளியில் படித்து வந்த 3 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து அந்த குழந்தையின் பெற்றோர் மணிமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் தமிழரசுவை கைது செய்தனர்.