தமிழக செய்திகள்

சிறுவனுக்கு பாலியல் தொல்லை:வாலிபருக்கு ஆயுள் தண்டனை

சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

பாலியல் தொல்லை

தூத்துக்குடி அருகே உள்ள தட்டப்பாறை மகிழம்புரத்தை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் சுடலைமணி (வயது 35). ஆடுமேய்க்கும் தொழில் செய்து வந்தார். இவர் கடந்த 2014-ம் ஆண்டு 15 வயது சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். இது குறித்த புகாரின் பேரில் தட்டப்பாறை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சுடலைமணியை கைது செய்தனர். இந்த வழக்கில் 11.5.16 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

ஆயுள் தண்டனை

தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், குற்றம் சாட்டப்பட்ட சுடலைமணிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாராட்டினார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்