தமிழக செய்திகள்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் போக்சோவில் கைது...!

கழுதி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

தினத்தந்தி

கமுதி,

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள அபிராமம் பகுதியை சேர்ந்தவர் ஆதிமுத்து செல்வன் (வயது 43). இவர் கொட்டகுடி அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் அந்த பள்ளியின் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து உள்ளதாக கூறப்படுகின்றது. பின்னர், அந்த மாணவியிடம் இது பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டியுள்ளார்.

இது குறித்து பெற்றோரிடம் சிறுமி தெரிவித்து உள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் முத்துமாரி, அபிராமம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

புகாரை தொடர்ந்து பள்ளி ஆசிரியர் ஆதிமுத்து செல்வனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானதை தொடர்ந்து ஆதிமுத்து செல்வத்தை போக்சோவில் கைது செய்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது