கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர், நிர்வாகம் மீது நடவடிக்கை - கனிமொழி எம்.பி.

சென்னையில் பள்ளி மாணவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவத்திற்கு கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை பி.எஸ்.பி.பி. பள்ளியில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீதும் அதை கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில், சென்னை பி.எஸ்.பி.பி பள்ளியில் ஒரு ஆசிரியர் (வணிகவியல்) மாணவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்வதாக எழுந்துள்ள புகார் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து குற்றம் செய்தவர் மீதும், அதை கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகத்தின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொண்டு செல்வேன் என்று உறுதியளிக்கிறேன் என்று கனிமொழி எம்.பி. பதிவிட்டுள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்