தென்காசி:
செங்கோட்டையை அடுத்த கட்டளைகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் காங்கேயம் (வயது 60). இவர் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் தென்காசி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காங்கேயத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.