வடமதுரை அருகே உள்ள பா.கொசவபட்டி காலனியை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 31). இவர், வீட்டில் தனியாக இருந்த 26 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் சத்தம் போடவே தண்டபாணி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். பின்னர் இதுகுறித்து அந்த பெண், வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து தண்டபாணியை கைது செய்தார்.