தமிழக செய்திகள்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

திருவையாறு அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருவையாறு;

பூதலூர் தாலுகாவில் ஒரு பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமியிடம் கல்லணை அருகே பாதரக்குடியை சேர்ந்த துரைராஜ் மகன் வீரமணி என்ற வீரராகவன் (வயது22) காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் மாணவி பள்ளிக்கு பஸ்சில் சென்ற போது மாணவியின் தோள்பட்டையில் கையை வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து புகாரின் பேரில் திருவையாறு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ்வழக்குப்பதிவு செய்து வீரராகவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...