சென்னை,
சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர் பேராட்டம் மேற்கெண்டு வருகின்றனர். சென்னை வண்ணாரப்பேட்டையில், 5-வது நாளாக பேராட்டம் நீடித்து வருகிறது.
சிஏஏவுக்கு எதிராக நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், பேராட்டத்தில் தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன பேன்ற கேரிக்கைகளை இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தின.
மேலும், முழுக்க முழுக்க மத்திய அரசைக் கண்டித்து மட்டுமே பேராட்டம் நடைபெறுவதாக, பேராட்டக்குழு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.