தமிழக செய்திகள்

செண்பகவல்லி அம்மன் கோவிலில் சனி பிரதோஷ விழா

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் சனி பிரதோஷ விழா நடந்தது

கோவில்பட்டி:

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் நேற்று சனி பிரதோஷ விழாவையொட்டி மாலை நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து பூவனநாதர், நந்தியம் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி வெள்ளைச்சாமி தலைமையில் கோவில் ஊழியர்கள் செய்திருந்தார்கள்.

கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் புற்றுக்கோவிலில் சனி பிரதோஷ விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் மந்தித்தோப்பு துளசிங்க நகர் பூமாதேவி கோவிலில் சனி பிரதோஷ விழா நடைபெற்றது.

SCROLL FOR NEXT