தமிழக செய்திகள்

சிவன் கோவில்களில் சனி பிரதோஷ விழா

சிவன் கோவில்களில் சனி பிரதோஷ விழா

தினத்தந்தி

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவிலில் அமைந்துள்ள காசி விஸ்வநாதருக்கு சனி பிரதோஷ விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து காசி விஸ்வநாதர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர்.

இதேபோல் கிணத்துக்கடவில் கோவை-பொள்ளாச்சி மெயின் ரோட்டில் சிவலோகநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சனி பிரதோஷ விழாவையொட்டி சிவலோகநாதருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், விபூதி, சந்தனம், கரும்புச்சாறு எலுமிச்சைச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிவலோகநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மேலும் கோவில்பாளையம் காளியண்ணன் புதூரில் உள்ள சுந்தரேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ விழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடைபெற்றது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்