சென்னை,
கூவத்தூரில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தலைமையில், எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வான எடப்பாடி பழனிச்சாமி, அவைத்தலைவர் செங்கோட்டையன் மற்றும் அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர்.
அப்போது எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சசிகலா பேசியதாவது:
கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். என்னைத்தான் சிறையில் அடைக்க முடியும், உங்கள் மேல் கொண்ட பாசத்தையோ, கட்சியின் மீதான அக்கறையையோ சிறையிலடைக்க முடியாது. நான் எந்த மாநிலத்தில் இருந்தாலும் என்னுடைய மனவோட்டம் கட்சி மீதே இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.