தமிழக செய்திகள்

சேகர் ரெட்டியை தமிழகத்துக்கு அறிமுகம் செய்தவர் ஓ பன்னீர் செல்வம்: அமைச்சர் சிவி சண்முகம்

சேகர் ரெட்டியை தமிழகத்துக்கு அறிமுகம் செய்தவர் ஓ பன்னீர் செல்வம் தான் என்று அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சேகர் ரெட்டியை தமிழகத்துக்கு அறிமுகம் செய்தவர் ஓ பன்னீர் செல்வம் தான் என்று அமைச்சர் சிவி சண்முகம் குற்றம் சாட்டினார். சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சிவி சண்முகம் கூறியதாவது:- ஜெயலலிதா சிறையில் இருந்த போது திருப்பதி தேவஸ்தானத்தின் உறுப்பினராக சேகர் ரெட்டி நியமனம் செய்ய முயற்சி எடுத்தது யார்?

பன்னீர்செல்வம் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த போது தான் சேகர் ரெட்டிக்கு பல ஒப்பந்தங்கள் அளிக்கப்பட்டன. சேகர் ரெட்டியை தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியதே பன்னீர்செல்வம் தான். ஓ பன்னீர் செல்வம் மீதான ஊழல் புகார்கள் முதலில் விசாரிக்க வேண்டும். குற்றச்சாட்டுகளுக்கு விசாரணையை சந்திக்க ஓபிஎஸ் தயாரா? இவ்வாறு அவர் பேசினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு