தமிழக செய்திகள்

விஜய் பரப்புரை நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தது அதிர்ச்சி அளிக்கிறது: பெ.சண்முகம்

சென்னை ஐகோர்ட்டு தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என பெ.சண்முகம் தெரிவித்துள்ளார் .

தினத்தந்தி

கரூர்,

கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்தார் . விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது இந்த நிலையில் இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

இன்று கரூரில் த.வெ.க தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நெரிசலில் சிக்கி 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு என்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இதில் ஏராளமானோர் குழந்தைகள் என்பது மிகப்பெரிய சோகம்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

எந்தவொரு பிரச்சாரக் கூட்டத்திலும் இவ்வளவு உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது.எந்த கட்டுப்பாடுகளுக்கும் எங்களை உட்படுத்திக் கொள்ள மாட்டோம்" என்ற ரசிகர்களின் செயல்பாடுகளே இதற்கு முக்கிய காரணமாகும். பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து சென்னை ஐகோர்ட்டு தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும். என தெரிவித்துள்ளார் . 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்