தமிழக செய்திகள்

திருத்தணி முருகன் கோவிலில் நடைபாதையை கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு - துணை ஆணையர் நடிவடிக்கை

திருத்தணி முருகன் கோவிலில் உள்ள கடைக்காரர்கள் பக்தர்கள் செல்லும் நடைபாதையில் பொருட்களை வைத்து ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். அவற்றை கோவில் துணை ஆணையர் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டார்.

தினத்தந்தி

திருத்தணி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆடிக்கிருத்திகை, தைப்பூசம் உள்ளிட்ட விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பக்தர்களின் தேவைகளுக்காக டீ, டிபன், கூல்டிரிங்ஸ், மாலை கடை, பேன்சி ஸ்டோர் உள்ளிட்ட கடைகள் கோவில் நிர்வாக அனுமதியுடன் நடத்தி வருகின்றனர்.

பக்தர்கள் நடந்து செல்லும் பாதையை ஆக்கிரமித்து கடைக்காரர்கள் கேஸ் ஸ்டவ், கூல்டிரிங்க்ஸ் ஃபிரிட்ஜ், டேபிள், சேர் ஆகியவற்றை போட்டு வைத்திருப்பதால் நடந்து செல்ல சிரமமாக இருப்பதாக பக்தர்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

இது குறித்து கடை உரிமையாளர்களிடம் பல முறை அறிவுறுத்தியும் அதனை அவர்கள் அதை கடைபிடிக்கவில்லை என தெரிகிறது. எனவே கோவில் துணை ஆணையர் விஜயா மற்றும் கோவில் ஊழியர்கள் அதிரடியாக பக்தர்கள் நடந்து செல்லும் வழியை ஆக்கிரமித்து வைத்திருந்த கேஸ் ஸ்டவ், டேபிள், ஃபிரிட்ஜ் போன்ற பொருட்களை பறிமுதல் செய்து டிரகாக்டரில் ஏற்றிச் சென்றனர்.

நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்தால் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என கோவில் துணை ஆணையர் விஜயா எச்சரித்தார். இதனால் திருத்தணி மலைக்கோவிலில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்