சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஜோலார்பேட்டையில் சிக்னல் அறையில் நடைபெற உள்ள பொறியியல் பணிகள் காரணமாக, ரெயில் சேவைகளில் சில மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
பெங்களூருவில் இருந்து ஜோலார்பேட்டைக்கு வரும் 18, 19 மற்றும் 24-ந் தேதிகளில் காலை 8.45 மணிக்கு புறப்படும் மெமு ரெயில் சோமநாயக்கன்பட்டியுடன் நிறுத்தப்படும். சோமநாயக்கன்பட்டி - ஜோலார்பேட்டை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல், ஈரோட்டில் இருந்து ஜோலார்பேட்டைக்கு வரும் 18, 19 மற்றும் 24-ந் தேதிகளில் புறப்படும் பயணிகள் ரெயில் திருப்பத்தூருடன் நிறுத்தப்படும். திருப்பத்தூர் - ஜோலார்பேட்டை இடையே ரத்து செய்யப்படுகின்றன.
இதனால், மேற்கண்ட 2 ரெயில்களும் நிறுத்தப்படும் ஊர்களில் இருந்தே திரும்பிச் செல்லும். அதேபோல், பெங்களூரு கண்டோன்மென்டில் இருந்து மதுரை நோக்கி புறப்படும் வந்தே பாரத் ரெயில் வரும் 18 மற்றும் 19-ந் தேதிகளில் 45 நிமிடங்கள் தாமதமாக புறப்படும். அதாவது, மதியம் 1.30 மணிக்கு பதில் பகல் 2.15 மணிக்கு கிளம்பும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.