தமிழக செய்திகள்

தர்மபுரி அங்காடிக்குபட்டுக்கூடுகள் வரத்து அதிகரிப்பு

தினத்தந்தி

தர்மபுரி:

தர்மபுரியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 882 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 2,330 கிலோவாக அதிகரித்தது. நேற்று முன்தினம் ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.583-க்கு விற்பனையான பட்டுக்கூடு நேற்று கிலோவிற்கு ரூ.17 அதிகரித்தது. 1 கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.600-க்கும், குறைந்தபட்சமாக ரூ.283-க்கும், சராசரியாக ரூ.470.91-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.10 லட்சத்து 97 ஆயிரத்து 280-க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை