தமிழக செய்திகள்

வெள்ளி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

வெள்ளி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

கொண்டலாம்பட்டி:-

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள ஆண்டிப்பட்டி பனங்காடு இலைக்கடை சந்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 40). இவருடைய மனைவி பிரேமா (30). இவர்களுக்கு ஹாசினி (9), ஜோவியா (5) என்ற 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் மணிகண்டன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சொந்தமாக வெள்ளி கம்பி மிஷின் வைத்து நடத்தி வந்துள்ளார். இதனிடையே மது குடிக்கும் பழக்கத்தால் நஷ்டம் ஏற்பட்டு அவரால் தொடர்ந்து தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால், தனது கம்பி எந்திர பட்டறையை மூடி விட்டு வேறொரு பட்டறைக்கு வேலைக்கு சென்று விட்டார். இதனால் முதலாளியாக இருந்த மணிகண்டன் தொழிலாளியாக மாறியதால் கடந்த சில நாட்களாக மனம் சோர்ந்து இருந்தார்.

இந்த நிலையில் மாடி வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவுரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்