கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்: அரசுத் தேர்வுகள் இயக்ககம்

10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை வரும் 23ஆம் தேதி முதல் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு மாணவர்கள் ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் தங்களின் மதிப்பெண் பட்டியலை இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் உஷாராணி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பள்ளி மாணவர்களுக்குப் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2021 தொடர்பான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை 23.08.2021 தேதி அன்று காலை 11.00 மணி முதல் 31.08.2021 தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மாணவர்களுக்குப் பிறந்த தேதி, தேர்வெண் ஆகியவற்றை அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்களுக்குக் குறுஞ்செய்தி வழியாக அரசுத் தேர்வுத் துறையின் மூலம் 21.08.2021 தேதி அன்று காலை 11.00 மணிக்கு அனுப்பி வைக்கப்படும்.

எனவே, பள்ளி மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தங்களுக்கான ரோல் எண், பிறந்த தேதி ஆகிய விவரங்களைப் பதிவு செய்து, தற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனைத்துப் பள்ளிகளும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து