தமிழக செய்திகள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் சிங்கப்பூர் போக்குவரத்து துறை மந்திரி சந்திப்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சிங்கப்பூர் போக்குவரத்து துறை மந்திரி ஈஸ்வரன் இன்று சந்தித்து பேசினார்.

சென்னை,

சிங்கப்பூர் நாட்டு போக்குவரத்து மற்றும் வர்த்தக தொடர்பு துறை மந்திரி எஸ்.ஈஸ்வரன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது அங்கு அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆகியோர் இருந்தனர்.

இந்த சந்திப்புக்கு பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-

சிங்கப்பூரின் போக்குவரத்து மற்றும் வர்த்தக தொடர்பு மந்திரி ஈஸ்வரனை சந்தித்தது ஒரு அற்புதமான தருணம். தமிழ்நாட்டிற்கும், சிங்கப்பூருக்கும் இடையிலான பண்பாடு மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆக்கப்பூர்வமான விவாதத்தை நடத்தினோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.    

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்