தமிழக செய்திகள்

சிவகங்கை: போலீஸ் வேன் மோதி ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி

சிவகங்கையில் நடந்த விபத்தில், 2 வயது குழந்தை உள்பட 3 பேர் பலியானார்கள்.

தினத்தந்தி

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இரு சக்கர வாகனம் ஒன்றில் தம்பதி மற்றும் அவர்களுடைய குழந்தை சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்களுடைய வாகனம் மீது எதிரே வந்த போலீஸ் வேன் மோதியது.

இந்த விபத்தில், 2 வயது குழந்தை உள்பட 3 பேர் பலியானார்கள். போலீஸ் வேன் மோதியதில் ஒரே குடும்பத்தின் 3 பேர் பலியான அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதுதவிர, விபத்தில் ஒருவர் காயம் அடைந்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு