தமிழக செய்திகள்

74 மாணவ-மாணவிகளின் ஸ்கேட்டிங் சாதனை

74 மாணவ-மாணவிகளின் ஸ்கேட்டிங் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

தினத்தந்தி

விருதுநகர் நோபிள் மெட்ரிக் பள்ளி, அருப்புக்கோட்டை மினர்வா மெட்ரிக் பள்ளி, சிவகாசி காமராஜர் மெட்ரிக் பள்ளி, கம்மவார் மெட்ரிக் பள்ளி, ராஜபாளையம் மெட்ரிக் பள்ளி ஆகிய பள்ளிகளில் இருந்து குடியரசு தினத்தை முன்னிட்டு 74 மாணவ-மாணவிகள் 74 நிமிடங்கள் இடைவிடாமல் தொடர் ஸ்கேட்டிங் செய்து சாதனை நிகழ்த்தினர். நோபிள் மெட்ரிக் பள்ளியில் நடந்த சாதனை நிகழ்ச்சியினை நோபிள் பள்ளித்தலைவர் டாக்டர் ஜெரால்டு ஞான ரத்தினம், செயலர் டாக்டர் வெர்ஜின் இனிகோ ஆகியோர் தொடங்கி வைத்தனர். நடுவர்களாக இந்தியன் நோவா அமைப்பின் இயக்குனர்கள் திலீபன் மற்றும் ஜெயக்குமார் செயல்பட்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. 

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்