தமிழக செய்திகள்

900 கிலோ ரேஷன் அரிசி காரில் கடத்தல்

திண்டுக்கல்லில் 900 கிலோ ரேஷன் அரிசியை காரில் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

திண்டுக்கல் நகர் பகுதியில் ரேஷன் அரிசியை கடத்தி வந்து அரிசி ஆலைகளில் மாவாக மாற்றப்படுவதாக திண்டுக்கல் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது. இதனையடுத்து குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பனையராஜா, செல்வம் மற்றும் போலீசார் திண்டுக்கல் நாகல்நகர் ரவுண்டானா பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது காருக்குள் திண்டுக்கல்லில்18 மூட்டைகளில் 900 கிலோ ரேஷன் அரிசி இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து காரை ஓட்டி வந்தவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் அவர், திண்டுக்கல் அபிராமி நகரை சேர்ந்த கோவிந்தன் (வயது 56) என்பதும், பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் இருந்து ரேஷன் அரிசியை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கார் மற்றும் ரேஷன் அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது