தமிழக செய்திகள்

நகர்ப்புற தேர்தலில் போட்டியிட இதுவரை 1,468 வேட்புமனுக்கள் தாக்கல்...!

நகர்ப்புற தேர்தலில் போட்டியிட இதுவரை 1,468 வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 19-ம் தேதி நடக்க இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 4-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக அதன் கூட்டணிக் கட்சிகளுடன் இடப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களை இறுதி செய்வதிலும் இட பங்கீட்டை விரைந்து முடிப்பதிலும் கட்சிகள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நகர்ப்புற தேர்தலில் போட்டியிட இதுவரை 1,468 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 12,838 பதவிகளுக்கு 1,468 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மாநகராட்சி வார்டு உறுப்பினர் - 241,

நகராட்சி வார்டு உறுப்பினர் - 475,

பேரூராட்சி வார்டு உறுப்பினர் - 752 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு