தமிழக செய்திகள்

நீட் தேர்வு பயிற்சிக்கு அரசு பள்ளி மாணவர்கள் 14,975 பேர் இதுவரை பதிவு

நீட் தேர்வு பயிற்சிக்கு அரசு பள்ளி மாணவர்கள் 14,975 பேர் இதுவரை பதிவு செய்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட புள்ளி விவரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

நீட் தேர்வுக்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் கல்வித்துறை சார்பில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் கல்வித்துறை சார்பில் நீட் தேர்விற்காக பயிற்சி வகுப்புகள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியை கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு பயிற்சிக்கு அரசு பள்ளி மாணவர்கள் 14,975 பேர் இதுவரை பதிவு செய்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 1380 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். மிகக் குறைந்தபட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 70 மாணவர்கள் மட்டுமே பயிற்சிக்கு பதிவு செய்துள்ளதாகவும் ஓரிரு நாளில் பயிற்சி தொடங்கும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு