தமிழக செய்திகள்

கோவையில் இதுவரை 496 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு

கோவையில் இதுவரை கருப்பு பூஞ்சை நோயால் 496 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினத்தந்தி

கோவை,

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், அதில் இருந்து குணமடைந்தவர்கள், சர்க்கரை நோயாளிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் என சிலர் கருப்பு பூஞ்சை என்ற நோயாலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி கோவையில் கடந்த மே மாதம் முதல் தற்போது வரை இந்த நோயால் 496 பேர் வரை பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் இதுவரை 496 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் 239 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மீதமுள்ள 257 பேர் கோவை அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று குறைந்ததன் காரணமாக கருப்பு பூஞ்சை நோயின் தாக்கமும் தணிந்து உள்ளது.

எனவே கொரோனா பாதித்து சிகிச்சை பெற்றவர்கள் தங்களது ரத்தத்தில் சர்க்கரை அளவை பரிசோதித்து அதற்கான மருந்துகளை எடுத்து சர்க்கரை அளவை சீராக பாதுகாத்தால் இந்த நோய் வராமல் தற்காத்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்