தமிழக செய்திகள்

சமூக நீதி கூட்டமைப்பில் இணைய அதிமுக விரும்பவில்லை: மு.க ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம்

சமூக நீதி கூட்டமைப்பில் நேரத்தை வீணடிப்பதை தவிர்த்து விட்டு நீட் போன்ற மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணையுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 37 தலைவர்களுக்கு திமுக தலைவரும், தமிழக முதல் அமைச்சருமான மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், சமூக நீதி கூட்டமைப்பில் இணைய அதிமுக விரும்பவில்லை என மு.க ஸ்டாலினுக்கு ஓ பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக ஓ பன்னீர் செல்வம் எழுதிய கடிதத்தில், அரசியல் ஆதாயத்திற்காக உருவாக்கப்பட்ட சமூக நீதி கூட்டமைப்பில் இணைய அதிமுக விரும்பவில்லை.

விவாதிக்காமல் அமைப்பு ஏற்படுத்தி விட்டு அதில் பிரதிநிதியை நியமிக்குமாறு வேண்டுகோள் விடுப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு முரணானது. சமூக நீதி கூட்டமைப்பில் நேரத்தை வீணடிப்பதை தவிர்த்து விட்டு நீட் போன்ற மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்