தமிழக செய்திகள்

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த ராணுவ வீரர் கைது

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

சிவகாசி, 

சிவகாசி அருகே உள்ள ஈஞ்சார் வடக்கு தெருவை சேர்ந்தவர் தங்கமாரீஸ்வரி (வயது 30). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (31) என்பவருக்கும் கடந்த 2016-ல் திருமணம் நடைபெற்றது. இவர் கடந்த 2012-ல் இருந்து ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தங்கமாரீஸ்வரிக்கும், முத்துகிருஷ்ணனுக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது. இது குறித்த வழக்கு சிவகாசி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்த முத்துகிருஷ்ணனுக்கும், தங்கமாரீஸ்வரிக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், ஆத்திரமடைந்த முத்துகிருஷ்ணன், தங்கமாரீஸ்வரிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராணுவ வீரர் முத்துகிருஷ்ணனை கைது செய்தனர். 

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை