தமிழக செய்திகள்

மாடிப்படியிலிருந்து விழுந்த ராணுவ வீரர் சாவு

மாடிப்படியிலிருந்து விழுந்த ராணுவ வீரர் சாவு இறந்தார்.

தினத்தந்தி

விருதுநகர் அருகே உள்ள கோட்டூரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(வயது 33). ராணுவ வீரரான இவர் உடல்நல பாதிப்பு காரணமாக சொந்த ஊருக்கு வந்துள்ளார். தனது பெற்றோரை பார்ப்பதற்காக செவல்பட்டிக்கு சென்றார். அங்கு மாடிப்படியில் இறங்கும்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ராதாகிருஷ்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது