தமிழக செய்திகள்

கார் மோதி ராணுவ வீரர் சாவு

ஆரணி அருகே கார் மோதி ராணுவ வீரர் பரிதாபமாக இறந்தார்.

தினத்தந்தி

ஆரணி

ஆரணியை அடுத்த குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தாமோதரன் என்பவரின் மகன் லோகேஷ் (வயது 25),

இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் ஒரு மாத விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

கடந்த 14-ந் தேதி ஆரணி - வேலூர் நெடுஞ்சாலையில் குன்னத்தூர் கூட்ரோடு அருகே உள்ள பெட்ரோல் பங்கில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடுவதற்காக சென்றார்.

அப்போது வேலூரில் இருந்து ஆரணி நோக்கி வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் லோகேஷ் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.புகழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை