சென்னை,
சென்னை பூங்கா ரெயில் நிலையத்தின் நடைமேடை எண் 2-ல், மின்சார ரெயில் ஒன்று இன்று காலை 11.27 மணியளவில் புறப்பட தயாரானது. அப்போது, தயாளன் (வயது 71) என்ற முதியவர், ஓடும் ரெயிலில் ஏற முயன்றிருக்கிறார்.
ஆனால், அவர் கீழே விழுந்ததில் நடைமேடையில் இழுத்து செல்லப்பட்டார். இதனால், உடன் இருந்த பயணிகள் சத்தம் போட்டு கூக்குரல் எழுப்பினர்.
அப்போது, ரெயில்வே பாதுகாப்பு படையில் பணியாற்றி வரும் அஜய் சிங் என்ற காவலர் உடனடியாக செயல்பட்டு அவரை இழுத்து காப்பாற்றினார். இதற்காக, அந்த வீரரை, ரெயிலுக்காக காத்திருந்த சக ரெயில் பயணிகள் பாராட்டினர்.