தமிழக செய்திகள்

மகன் தூக்குப்போட்டு தற்கொலை

தாய் இறந்த வேதனை தாங்காமல் மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தினத்தந்தி

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட மேல் கூடலூர் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் ராபர்ட். இவரது மகன் ஜான் பிரிட்டோ (வயது 37). இவருக்கு திருமணமாக வில்லை. இதனிடையே அவரது தாயார் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்து வந்தார். தொடர்ந்து மதுபோதைக்கு அடிமையானார். இந்த நிலையில் ஜான் பிரிட்டோ வாழ்க்கையில் விரக்தி அடைந்தார். தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப்போட்டு ஜான் பிரிட்டோ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தொடர்ந்து கூடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் நேற்று உடல் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்