தமிழக செய்திகள்

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க சென்னை புறப்பட்டனர் சோனியா- ராகுல்

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க டெல்லியில் இருந்து காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சென்னை புறப்பட்டனர்.

சென்னை,

சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா இன்று நடைபெற உள்ளது. சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக அனைத்து தலைவர்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

சிலை திறப்பு விழாவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன், ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க டெல்லியில் இருந்து விமானம் மூலம் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சென்னைக்கு புறப்பட்டனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...