தமிழக செய்திகள்

தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட ரெயில்களில் டீ, காபி விலை ரூ.10 ஆக உயர்வு இன்று முதல் அமல்

தெற்கு ரெயில்வேயில் இன்று (வெள்ளிக் கிழமை) முதல், ரெயில் களில் டீ மற்றும் காபி விலை ரூ.10 ஆக உயர்கிறது.

சென்னை,

நாடு முழுவதும் ரெயில்களில் டீ, காபி விலையை அதிகரித்துக்கொள்ள ஐ.ஆர்.சி.டி.சி-க்கு ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளித்து இருக்கிறது. இதற்கான சுற்றறிக்கையை ரெயில்வே நிர்வாகம், அந்தந்த மண்டலங்களுக்கு அனுப்பியது.

இதைத்தொடர்ந்து தெற்கு ரெயில்வேயில் உள்ள சென்னை சென்டிரல், சேலம், திருச்சி, மதுரை, பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய கோட்டங்கள் வழியாக செல்லும் ரெயில்களில் டீ, காபி விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இந்த விலை உயர்வு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

அதேநேரம் ரெயில் நிலையங்களில் ஏற்கனவே தயார் செய்துகொண்டு வந்து விற்கப்படும் டீ ரூ.5 என்ற விலையிலே தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என்று தெற்கு ரெயில்வே வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்