தமிழக செய்திகள்

“தமிழ் பத்திரிகை வரலாற்றின் புரட்சியாளர் சி.பா.ஆதித்தனார்” - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழாரம்

சி.பா.ஆதித்தனார் அவர்கள் தமிழ் பத்திரிகை வரலாற்றின் புரட்சியாளர் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்தநாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு முதல், சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந்தேதி சட்டசபையில் பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். முதல்-அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு தமிழ் அறிஞர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து இன்று சென்னை எழும்பூரில் சி.பா.ஆதித்தனார் சிலை அருகே வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், மாஃபா பாண்டியராஜன், பாடநூல் கழகத் தலைவர் வளர்மதி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், மாலை முரசு நிர்வாக இயக்குநர் கண்ணன் ஆதித்தன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் சி.பா.ஆதித்தனார் ஆற்றிய சேவைகளை எண்ணி பெருமை கொள்வதாக புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், நாட்டு நடப்பை பாமரர்களுக்கும் கொண்டு சென்ற தமிழ் பத்திரிகை வரலாற்றின் புரட்சியாளர், தினத்தந்தி நிறுவனர், பன்முகத் தன்மை கொண்ட தமிழ்ப்பற்றாளர், தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் அவர்களின் பிறந்த நாளான இன்று தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் அவர் ஆற்றிய சேவைகளை எண்ணி பெருமை கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்