தமிழக செய்திகள்

பின்னணி பாடகர் எஸ்.பி.பி.யின் உடல் நிலை சீராக உள்ளது: தனியார் மருத்துவமனை அறிக்கை

பின்னணி பாடகர் எஸ்.பி.பி.யின் உடல் நிலை சீராக உள்ளது என்று தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த 15 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு, அவருடைய உடல்நிலை மோசமடைந்ததால், தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவி பொருத்தி, டாக்டர்கள் சிகிச்சை அளித்தார்கள்.

வெளிநாட்டு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையும் கேட்கப்பட்டது. எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று மாலை எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல் நிலை குறித்து தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அதில், பின்னணி பாடகர் எஸ்.பி.பி.யின் உடல் நிலை சீராக உள்ளது. தொடர்ந்து எக்கோ மற்றும் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு