தமிழக செய்திகள்

காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் பங்கேற்க சபாநாயகர் அப்பாவு கனடா பயணம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

கனடாவில் நடைபெறவிருக்கும் 65-வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்க உள்ளார்.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

இம்மாதம் 22 முதல் 26-ந்தேதி வரை கனடா நாட்டின் ஹாலிபேக்ஸ் நகரில் நடைபெறவிருக்கும் 65-வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் தமிழக கிளையின் பிரதிநிதியாக சபாநாயகர் மு.அப்பாவு கலந்துகொள்கிறார். சட்டசபை செயலாளர் கி.சீனிவாசன் இம்மாநாட்டில் நடைபெறும் 'சோகாட்' கூட்டங்களில் கலந்துகொள்கிறார்.

சபாநாயகர் மு.அப்பாவும், செயலாளர் கி.சீனிவாசனும் மேற்குறிப்பிட்ட மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இன்று இரவு 9.45 மணிக்கு எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் சென்று, அங்கிருந்து சான் பிரான்சிஸ்கோ நகருக்கு ஆய்வுப் பயணம் மேற்கொண்டு, பின்பு ஹாலிபேக்ஸ் நகருக்கு சென்றடையவுள்ளார்.

சபாநாயகர் மு.அப்பாவும், செயலாளர் கி.சீனிவாசனும் மேற்குறிப்பிட்ட மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு 1-9-2022 (வியாழக்கிழமை) இரவு 8.30 மணியளவில் எமிரேட்ஸ் விமானம் மூலம் சென்னை வந்தடைகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கனடாவில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க உள்ள சபாநாயகர் அப்பாவுவை இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். 

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்