சென்னை,
தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களை அவதூறாக பேசியதாக டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் மீது சென்னையில் உள்ள 8 போலீஸ் நிலையங்களில், 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இந்த 8 வழக்குகளையும் ரத்து செய்யவேண்டும் என்றும், இது தொடர்பாக தாக்கல் செய்யப்படும் மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எம்.எஸ்.ரமேசிடம், நாஞ்சில் சம்பத் வக்கீல் முறையிட்டார்
ஆனால், இந்த கோரிக்கையை நீதிபதி ஏற்கவில்லை. மனுவை தாக்கல் செய்தால், பிற மனுக்களுடன், இந்த மனுவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதி கூறினார்.