தமிழக செய்திகள்

புகழ்ந்து பேசினால்...! தி.மு.க. எம்.எல்.ஏ-க்களுக்கு மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை!

மானியகோரிக்கை மீதான விவாதத்தில் தன்னை புகழ்ந்து பேசினால் தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மு.க. ஸ்டாலின் கூறி உள்ளார்.

தினத்தந்தி

சென்னை

சட்டசபையில் தலைவர்களை புகழந்து பேசுவதில் நேரத்தை வீணாக்க வேண்டாம், மீறி பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது தி.மு.க. எம்.எல்.ஏ ஐயப்பன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசினார். இதற்கு கண்டனம் தெரிவித்த மு.க.ஸ்டாலின், ''மானியகோரிக்கை மீதான விவாதத்தில் தன்னை புகழ்ந்து பேசினால் தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

நேற்றே அவை நேரத்தை வீண்டிக்க வேண்டாம் என எச்சரித்தேன். எதையும் லிமிட் ஆக வைத்துக்கொள்ளுங்கள். நேற்றே இது தொடர்பாக கட்டளையிட்டேன்'' என்று அவர் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?