அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் நாளை (சனிக்கிழமை) அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று கணக்க விநாயகருக்கு கங்கைநீர், மஞ்சள், சந்தனம், பால், பன்னீர், தேன், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம், பழங்கள் உள்ளிட்ட 21 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மலர் மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அன்னாபிஷேக விழாகமிட்டியினர் மற்றும் இந்து சமயஅறநிலையத்துறையினர் செய்திருந்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு பிரகதீஸ்வரருக்கு ருத்ரஹோமம், மகாஅபிஷேகம், தீபாராதனை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.