தமிழக செய்திகள்

முனியப்ப சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை

முனியப்ப சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

நொய்யல்

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள முனிநாதபுரத்தில் சுற்றுவட்டார பகுதி பொதுமக்களின் காவல் தெய்வமாக விளங்கி வரும் பிரசித்தி பெற்ற முனியப்பசுவாமி மற்றும் மகாமுனி சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலின் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு பொங்கல், மாவிளக்கு பூஜையும், வாணவேடிக்கையும் நடைபெற்றது. நேற்று திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து முனியப்பசுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து முனியப்ப சுவாமி மற்றும் மகா முனி சுவாமிக்கு பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து முனியப்ப சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு முனியப்ப சுவாமி மற்றும் மகா முனி சுவாமியை தரிசனம் செய்து அருள் பெற்றனர். இறுதியில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு