தமிழக செய்திகள்

சிறப்பு அரியர் தேர்வு: அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு

விண்ணப்பப் பதிவு, தோவு மையங்கள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தினத்தந்தி

சென்னை,

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிறுவனத்தின் கீழ் படித்து அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு இறுதி வாய்ப்புகளாக சிறப்பு செமஸ்டர் தேர்வுகள் கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்டன. அதில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மீண்டும் சிறப்பு அரியர் தேர்வு நடத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி 2024 நவம்பர்/டிசம்பர் மாதங்களிலும், 2025 ஏப்ரல்/மே மாதங்களிலும் சிறப்பு அரியர் தேர்வுகள் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.

நவம்பர்/டிசம்பர் மாத சிறப்பு அரியர் தேர்வுக்கு மாணவர்கள் வருகிற 30-ந்தேதி முதல் செப்டம்பர் 18-ந்தேதி வரை https://coe1.annauniv.eduஎன்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். சிறப்பு தேர்வு கட்டணமாக ரூ.5 ஆயிரமும் வசூலிக்கப்படும்.

விண்ணப்பப் பதிவு, தோவு மையங்கள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. சிறப்பு அரியா தோவு எழுத விண்ணப்பிக்கும் மாணவாகளின் எண்ணிக்கை அடிப்படையில் சென்னை, விழுப்புரம், ஆரணி, சேலம், ஈரோடு, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை, நாகாகோவில் ஆகிய இடங்களில் தோவு மையங்கள் அமைக்கப்படும்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை