தமிழக செய்திகள்

தைப்பூசம், பவுர்ணமியையொட்டி பழனி - திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள்

தைப்பூசம், பவுர்ணமியையொட்டி பழனி - திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

சேலம்,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டம் சார்பில் பண்டிகை காலங்களிலும், தொடர் விடுமுறை நாட்களிலும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி, வருகிற 5-ந் தேதி தைப்பூசம் மற்றும் பவுர்ணமி கொண்டாடப்படுகிறது. தைப்பூசம், பவுர்ணமியையொட்டி தமிழகம் முழுவதும் அனைத்து போக்குவரத்து கழக கோட்டங்களிலும் பழனி, திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

அதுபோல், சேலம் கோட்டத்தில் இருந்து பழனி, வடலூர், திருவண்ணாமலைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. இந்த சிறப்பு பஸ்கள் வருகிற 4-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை இயக்கப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், வருகிற 5-ந் தேதி தைப்பூசம், பவுர்ணமியை முன்னிட்டு சேலம் கோட்டத்தில் இருந்து பழனி, வடலூர், திருவண்ணாமலை, கபிலர்மலை, காளிப்பட்டிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இந்த சிறப்பு பஸ்கள் 4-ந் தேதி முதல் இயக்கப்படவுள்ளது என்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு