தமிழக செய்திகள்

குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு குறித்த சிறப்பு முகாம்

குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு குறித்த சிறப்பு முகாம் நடைபெற்றது.

தினத்தந்தி

தோகைமலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு குறித்த சிறப்பு முகாம் நடைபெற்றது. இதற்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய குழு உறுப்பினர் கோமதி மனோஷா தலைமை தாங்கினார். கூட்டத்தில் குழந்தைகள் தொடர்பான வன்கொடுமைகள், பாலியல் குற்றங்களில் குழந்தைகள் பாதிக்கப்படுவது, 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளின் கல்வி, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், காப்பீட்டு திட்ட அட்டை, குடும்ப அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து வகையான புகார்களும் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டது. முகாமில் குழந்தைகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். முகாமில் பல்வேறு துறை திட்ட விளக்கம் சார்ந்த அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து