கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் - கல்வித்துறை அறிவிப்பு

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெறும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு கடந்த மாதம் (ஜூன்) வெளியானது. இதில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டுகளை விட குறைவாக இருந்தது. இந்த நிலையில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு துணை தேர்வு நடத்தப்பட உள்ளது.

அந்த தேர்வுக்கு மாணவர்களை தயார்ப்படுத்த மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

2021-22-ம் கல்வியாண்டில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு வருகிற 25-ந் தேதி மற்றும் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 8-ந் தேதியும் துணை தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இந்த துணை தேர்வில் தேர்ச்சி அடையும் பொருட்டு சார்ந்த பாட ஆசிரியர்கள் தேர்வு முடியும் வரை தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு படித்த பள்ளியில் மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தி தேர்வில் பங்கு பெறுவதற்கான வாய்ப்புகளை தலைமை ஆசிரியர்கள் ஏற்படுத்தி தரவேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை