தமிழக செய்திகள்

10-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி வகுப்புகள் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை வெளியிடப்பட உள்ளன.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு, மாநிலம் முழுவதும் 4,107 மையங்களில் கடந்த மார்ச் 26 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடந்தது.9.08 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதையடுத்து, மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் 88 முகாம்களில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளன.

இந்த நிலையில், 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, 13ம் தேதி முதல் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் சனிக்கிழமை தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு