தமிழக செய்திகள்

தி.மலை அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு கட்டணம் ரத்து.!

சிறப்பு கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த கட்டணம் ரத்துசெய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

திருவண்ணாமலை,

பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திகழ்கிறது. இங்கு ஈசன் மலை உருவில் ஜோதி வடிவில் அருள்பாலித்து வருகிறார்.

இந்த கோவிலுக்கு மாதந்தோறும் பவுர்ணமி நாட்களிலும், கார்த்திகை தீபத் திருநாளன்றும் தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

இந்தந் இலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் செய்ய நடைமுறையில் இருந்த சிறப்பு கட்டணம் ரத்துசெய்யப்பட்டு உள்ளது. பௌர்ணமியையொட்டி அண்ணாமலையார் கோவிலில் இனி பக்தர்கள் இலவசமாக தரிசனம் செய்துகொள்ளலாம்.

சிறப்பு கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த கட்டணம் ரத்துசெய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.  

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு