தமிழக செய்திகள்

சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடக்கிறது.

தினத்தந்தி

கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலன் காக்க சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்திட அரசு ஆணையிட்டுள்ளதை தொடர்ந்து, புகளூர் காந்தியார் மண்டபத்தில் கரூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை மனுவில் குறிப்பிட்டு நேரில் அளிக்கலாம். இந்த கோரிக்கை மனுக்கள் அனைத்தும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களால் பரிசீலிக்கப்பட்டு தீர்வு காணப்படும். எனவே மாற்றுத்திறனாளிகள் இச்சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்