தமிழக செய்திகள்

பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்ற கோரி மனு

பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்ற கோரி மனு ஐகோர்ட்டில் இன்று விசாரணை வர உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்கும்படி மாணவிகளை வற்புறுத்திய அருப்புக்கோட்டை உதவி பேராசிரியை நிர்மலாதேவிக்கு எதிரான வழக்கின் விசாரணையை, பெண் டி.ஐ.ஜி. தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

புரட்சிகர மாணவர்கள் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக்கல்லூரியின் உதவி பேராசிரியை நிர்மலாதேவி. இவர், உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்கும்படி செல்போனில் மாணவிகளை வற்புறுத்தும் உரையாடல் வாட்ஸ்-அப்பில் வெளியானது.

இதுகுறித்து அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, நிர்மலாதேவியை கைது செய்தனர். பின்னர், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில், சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த ஜெயந்த்முரளி திடீரென மாற்றப்பட்டார். இது பலருக்கு சந்தேகத்தை உருவாக்கியுள்ளது.

இந்த வழக்கில் தன் மீது எழுந்துள்ள சந்தேகம் குறித்து தமிழக கவர்னர், பத்திரிகையாளர்கள் கூட்டத்தை கூட்டி விளக்கம் அளித்தார். அப்போது, இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் தலைமையில் உயர் மட்ட விசாரணை குழுவை அமைத்துள்ளதாக அறிவித்தார்.

இவ்வாறு ஒரு குழுவை அமைப்பதற்கு முன்பு மாநில அரசுடன் அவர் ஆலோசனை செய்யவில்லை. இதுபோன்ற விசாரணை குழுவை அமைக்க கவர்னருக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை.

இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஒரு விசாரணை குழுவை அமைத்துள் ளார். அப்படி இருக்கும்போது, துணை வேந்தரின் அதிகாரத்தில், கவர்னர் தலையிட முடியாது.

ஒரு குற்றச்சம்பவத்துக்கு பல விதமான விசாரணைகள் நடத்தப்பட்டால், அது சரியாக இருக்காது.

எனவே, டி.ஐ.ஜி. பதவிக்கு குறையாத, குறிப்பாக பெண் போலீஸ் அதிகாரி தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும். இந்த சிறப்பு புலனாய்வு குழுவிடம் விசாரணையை ஒப்படைக்க வேண்டும். இந்த குழுவின் விசாரணையை ஐகோர்ட்டு கண்காணிக்க வேண்டும்.

மேலும், அந்த கல்லூரி மாணவிகள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கும் விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட வேண்டும்.

பணி செய்யும் இடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழுவை அமைக்க வேண்டும். அதில் விருதுநகர் மாவட்ட கலெக்டர், பெண் வக்கீல்கள் உள்ளிட்டோர் இடம் பெறவேண்டும். இந்த குழு மாணவிகளிடம் புகாரை பெற்று, விசாரணை நடத்தி, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி வி.பாரதிதாசன் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது