தமிழக செய்திகள்

சீரான மின்சாரம் விநியோகிக்க 234 தொகுதிகளிலும் சிறப்பு அதிகாரிகள் நியமனம் - அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

மின்சார வாகனங்களுக்கு சார்ஜர் நிலையங்கள் அமைக்க 100 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"நீலகிரி மாவட்டத்தில் 12 இடங்களில் மரம் விழுந்து மின் வயர்கள் அறுபட்டுள்ளதால், 150 மின்மாற்றிகளில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இன்று மாலைக்குள் மரங்கள் அகற்றப்பட்டு சீரான மின் விநியோகம் வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இனி வரும் நாட்களில் சீரான மின்சாரம் விநியோகம் செய்வதற்காக, முதல்-அமைச்சர் வழிகாட்டுதலின்படி ஒரு தொகுதிக்கு ஒரு அதிகாரி என்ற அடிப்படையில் 234 தொகுதிகளிலும் சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்படுள்ளனர்.

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜர் நிலையங்கள் அமைக்க 100 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன."

இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்